மயங்கி விழுந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழப்பு…! யாழில் சோகம்…!

யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆசிரியர் ஒருவர்  கடந்த சில தினங்களுக்கு முன்னர் மயங்கி விழுந்த நிலையில் நேற்றையதினம்(20) உயிரிழந்த சம்பவம் யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோண்டாவில் பகுதியை சேர்ந்த யாழ் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆசிரியரான, ஞானசம்பந்தர் மில்ரன் (வயது 32) எனும் ஆசிரியர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இந்நிலையில், அவரை சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(20) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Leave a Reply