ஜனாதிபதி தேர்தலில் மலையக பெருந்தோட்ட மக்களின் வாக்குகள் சஜித்திற்கே…!ரஞ்சித் மத்தும பண்டார நம்பிக்கை…!

மலையக பெருந்தோட்ட மக்கள் மத்தியில்  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கு இருந்த ஆதரவு சரிந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

பொகவந்தலாவை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த, ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார,

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மலையக பெருந்தோட்ட மக்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கே ஆதரவு வழங்குவார்கள்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸை தவிர மலையகத்தில் உள்ள ஏனைய கட்சிகளின் ஆதரவு ஐக்கிய மக்கள் சக்திக்குதான். ஆனால் காங்கிரசுக்கு மக்கள் மத்தியில் அன்று இருந்த ஆதரவு இன்றில்லை. 

கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் சஜித்துக்கே மலையக மக்கள் ஆதரவு வழங்கினர் எனவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply