பிரபல நடிகையுடன் ஜோடி சேரும் அதிதி சங்கர்

அதிதி ஷங்கர்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்று தந்தது.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்தார். இப்படத்திலும் இவருக்கு நல்ல ஸ்கோப் இருந்தது. ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடித்துள்ள இவர் அடுத்தடுத்த படங்களை குவித்து வருகிறார்.

ஆம், தற்போது விஷ்ணு வர்தன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் அதிதி, அடுத்ததாக சூர்யாவின் புறநானூறு திரைப்படத்திலும் நடிப்பதாக ஏற்கனவே தகவல் ஒன்று வெளிவந்திருந்தது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை.

பிரபல நடிகருடன் இணையும் அதிதி

இந்நிலையில், தற்போது எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அதர்வா நடிக்கவுள்ளாராம்.

ராஜேஷ் தற்போது ஜெயம் ரவியின் பிரதர் திரைப்படத்தை இயக்கி வரும் நிலையில், இப்படத்திற்கு பின் அதிதி, அதர்வா படத்தை இயக்குவார் என பேசப்படுகிறது.

The post பிரபல நடிகையுடன் ஜோடி சேரும் அதிதி சங்கர் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply