மூன்றரை இலட்சம் பெறுமதியான முக்கிய பொருட்களை கைப்பற்றிய சாவகச்சேரி பொலிஸார்…!

யாழ். சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுணாவில் வைரவர் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக உழவியந்திரத்தில் எடுத்துச் செல்லப்பட்ட மரக்குற்றிகளை பொலிஸார் நேற்றையதினம்(29) கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது, மூன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான 6 இலுப்பை மரக்குற்றிகள் மற்றும் 3 வேப்ப மரக் குற்றிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அத்துடன் உழவியந்திரத்துடன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான சந்தேக நபரை நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply