ஐந்து மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் நிலவும் வெப்பமான காலநிலை காணப்படுவதாகவும், மனித உடலால் அதிகளவில் உணரக்கூடிய நிலை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த நிலைமை வடமேற்கு, மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை பாதிக்கும் என திணைக்களம் தெரிவிக்கிறது.
வெப்பமான வானிலை காரணமாக அவதானம் செலுத்த வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.