சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு…!

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தால் வறுமைக் கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்  நேற்றுமுன்தினம்(02) வழங்கி வைக்கப்பட்டன. 

கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் உறுப்பினர் ஒருவரால் சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் நலன்புரி நிதியத்திற்கு வழங்கப்பட்ட நிதியில் இருந்து இந்த உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

சமூகத்தின் மீதான அக்கறை என்ற 7வது கூட்டுறவு கொள்கைக்கு அமைவாக இந்த உதவித்திட்டம் வழங்கும் செயற்றிட்டமானது கடந்த 27.01.2022 அன்று தலைவர் ப.கேசவதாசனால் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் வருடா வருடம் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின தலைவர் கேசவதாசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சங்கத்தின் பொது முகாமையாளர் திருமதி கோ.கிருஷ்ணவேணி, சங்கத்தின் உப தலைவர் செ.குமாரசிங்கம், சங்கானை பிரதேச செயலர் திருமதி உ.கவிதா, சங்கத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களான சி.பரமானந்தராசா,கா.பார்த்தீபன், முன்னாள் பணியாளரும் நிதி வழங்குனருமான சி.முகுந்தன், சங்கத்தின் பணியாளர்கள்,  மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *