ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சி உறுப்புரிமை மற்றும் அவர் வகிக்கும் பதவியில் இருந்து இடைநிறுத்துவதற்கான செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்திக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை உத்தரவு மீள நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நேற்றையதினம் கொழும்பு மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய விசாரணையின் போது, இந்த இடைக் காலத்தடையை நீக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தி நீதிமன்றில் அடிப்படை ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்திக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை எதிர்வரும் 19 ஆம் திகதி வரை நீடிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.