சந்தையில் முட்டையின் விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் வகையில், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் இருந்து சுமார் 4 கோடி முட்டைகளை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முட்டை விலையை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவசாய அமைச்சில் அண்மையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தை இலக்கு வைத்து சந்தையில் முட்டை விலையை அதிகரிக்கும் சூழ்ச்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு முட்டை 55 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.