யாழில் வீதிக்கிறங்கிய மக்கள்!

  இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை (05) காலை முதல் யாழ்ப்பாணத்திஒல் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறுகின்றது.

இந்த ஆர்ப்பாட்டம் யாழ் மாவட்ட செயலகம் முன்பாகவும் வடக்குமாகாண ஆளுநர் அலுவலக பிரதான வீதியிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

ஆர்ப்பாட்டகாரர்கள் வடக்கு ஆளுநர் அலுவலகதிற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மாத்திரம் ஆளுநர் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை துதரகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக சென்று எதிர்ப்பினை வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.  

The post யாழில் வீதிக்கிறங்கிய மக்கள்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply