விபத்தில் சிக்கி உயிரிழந்த உயர்தர வகுப்பு மாணவனுக்கு பாடசாலை மாணவர்கள் இறுதி அஞ்சலி..!samugammedia

கடந்த வெள்ளிக்கிழமை மீசாலை ஐயா கடைச் சந்திப் பகுதியில் விபத்தில் சிக்கி யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் உயர்தர வகுப்பு மாணவனான செல்வன் சி.பரணிதரன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த மாணவனுக்கு பாடசாலை மாணவர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை மேற்படி மாணவன் பாடசாலையில் இடம்பெற்ற விளையாட்டுப் பயிற்சியை முடித்து விட்டு வீடு நோக்கி துவிச்சக்கரவண்டியில் செல்லும் போது இ.போ.ச பேருந்து மோதி உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில், மாணவனின் மரணச்சடங்கு இன்று (05) அவரது இல்லத்தில் இடம்பெற்று தனங்கிளப்பு வீதியில் உள்ள கண்ணாடிப்பிட்டி மயானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்பட்டது.

இதன் போது சாவகச்சேரி இந்துக் கல்லூரி மற்றும் டிறிபேர்க் கல்லூரி மாணவர்கள்  குறித்த மாணவனுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தனர். சக மாணவர்கள் மாணவனின் உடலை தோளில் சுமந்துகொண்டு சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *