Meta சமூக வலையமைப்பின் பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்சர் ஆகிய செயலிகள் இலங்கை உட்பட பல நாடுகளில் நேற்று இரவு திடீரென செயலிழந்தன.
குறித்த வலையமைப்பின் வட்ஸ்அப் மாத்திரம் செயற்பட்டு வந்தது.
இவ்வாறு செயலிழந்த குறித்த செயலிகள், சுமார் ஒரு மணிநேரத்திற்கு பின்னர் வழமைக்கு திரும்பின.
இந்த நிலையில், முடக்கத்திற்கான காரணம் குறித்து Meta நிறுவனம் எந்த விதமான தகவல்களையும் வெளியிடாமல் இருந்த நிலையில், தொழில்நுட்ப கோளாறே பேஸ்புக், இன்ஸ்ராகிரேம் மற்றும் மேசேன்ஜர் ஆகிய செயலிகள் செயலிழக்க காரணம் என Meta நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.