யாழில் இலங்கை விமானப்படையின் வான் சாகச கண்காட்சி ஆரம்பம்…!

இலங்கை விமானப்படையின் 73 வது ஆண்டு நிறைவையொட்டி யாழ்ப்பாணம் முற்றவெளியில் மாபெரும் கண்காட்சியானது இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது..

இன்று ஆரம்பமான குறித்த கண்காட்சி எதிர்வரும் 10 ஆம் திகதி வரை காலை 10 மணியில் இருந்து இரவு 10 மணிவரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இக் கண்காட்சியில் பாடசாலை சீருடையில் வருகை தரும் மாணவர்கள் இந்த நிகழ்வை முற்றுமுழுதாக இலவசமாக பார்வையிடலாம் எனவும் ஏனையோர் 100 ரூபா கட்டணம் செலுத்தி இந்த நிகழ்வை பார்வையிட முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த கண்காட்சி மூலம் பெற்றுக் கொள்ளப்படும் முழுத் தொகையும் வடக்கு மாகாணத்தில் காணப்படும் 73 பாடசாலைகளின் புனர் நிர்மாணத்திற்கும் , அந்த பாடசாலையில் கல்வி கற்கும் பின்தங்கிய மாணவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கும், அவர்களுக்கு 73ஆயிரம் பாடசாலை புத்தகங்களை வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் நாடளாவிய ரீதியில் 73ஆயிரம் மரக்கன்றுகளை நடும் செயற்றிட்டமும் இதன் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இதற்கான பூரண அனுசரணையை வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் ஊடாக இலங்கை விமானப் படை பெற்றுள்ளது.

இலங்கை விமானப்படையின் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்சவின் கண்காணிப்பு மற்றும் வழிக்காட்டுதல்களின் ஊடாக இந்த கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Leave a Reply