தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் டொலர்களுக்காக நாடாளுமன்றில் கூச்சலிடுவதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்தன குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் சாணக்கியனை ரோஹித்த அபேகுணவர்தன இவ்வாறு கடுமையாக திட்டியுள்ளார்.
சாணக்கியன் ஒரு விடுதலைப் புலி எனவும் பயங்கரவாதத்தையே கக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழில் ஒன்றையும் சிங்களத்தில் ஒன்றையும் சாணக்கியன் கூறுவதாக தெரிவித்துள்ளார்.
மீண்டும் நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை கொண்டு வர முயற்சிப்பதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
முழுமையாக இனவாத அடிப்படையில் பேசுவதாகவும், நிலக்கண்ணி வெடிகளை அகற்றிய கௌரவத்தை கூட வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சாணக்கியன் தேசத்துரோக செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.