இலங்கையில் அதிகபடியான சூரிய ஒளியின் தாக்கம்; பார்வை இழப்பு ஏற்படும் அபாயம்! வைத்தியர் எச்சரிக்கை

 

நாட்டில் நிலவும் அதிக படியான சூரிய ஒளியின் தாக்கம் பார்வை இழப்பிற்கு வழிவகுக்கும் என கண் வைத்திய நிபுணர் முதித குலதுங்க தெரிவித்துள்ளார்.

அதிக சூரிய ஒளியால் கண்கள் வறண்டு போகாமல் இருக்க தண்ணீர் அருந்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் புற ஊதா கதிர்கள் கண்களுக்குள் படாமல் இருக்க கண்ணாடி பயன்படுத்துவதும் அவசியம் என்று கண் மருத்துவர் குறிப்பிட்டார்.

அதற்கு மேலதிகமாக கண்களை பாதிக்காத தொப்பிகளை பயன்படுத்துமாறும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Leave a Reply