ஜனாதிபதி ரணில்விக்ரமசிங்கவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டால் அதற்கு இணங்கி செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவே உள்ளோம். கிராம மட்டத்தில் இருந்து எமது வேலைத்திட்டங்களை நாம் ஆரம்பித்துள்ளோம்.
கட்சி என்ற ரீதியில் நாம் இணைந்து செயற்படுவோம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக கட்சியில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டாலும் அதற்கும் நாம் இணங்கி செயற்படுவோம்.
சஜித் பிரேமதாசவுக்கு மக்கள் ஆதரவு உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கின்ற போதிலும் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தவர் ரணில் விக்ரமசிங்க என்பதை நான் மறந்துவிடவில்லை. – இவ்வாறு தலதா அதுகோரல தெரிவித்துள்ளார்.