தனது 107 ஆவது பிறந்தநாளை வெகுவிமர்சியாக கொண்டாடிய முதியவர் உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

 

யாழ்ப்பாணம் – சாவகச்சேரியில் 107 வயது முதியவர் ஒருவர் சுகயீனம் காரணமாக நேற்று  உயிரிழந்துள்ளார். 

சாவகச்சேரி உதயசூரியன் பகுதியினை சேர்ந்த பூச்சி வேலுமுத்து என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

1917ஆம் ஆண்டு  பிறந்த இவர், தனது 107 வயது பிறந்தநாளை அண்மையில் வெகுவிமர்சியாக கொண்டாடியிருந்தார். 

இவருக்கு 10 பிள்ளைகள், 75 பேரப்பிள்ளைகள், 25 பூட்டப்பிள்ளைகள் 5 கொள்ளுப் பேரப் பிள்ளைகள் உள்ளனர்.

கடந்த 1 மாத காலமாக சுகயீனமுற்ற நிலையில் அவர் நேற்று உயிரிழந்துள்ளார்.  

இலங்கையில் ஆங்கிலேயர் ஆண்ட காலப்பகுதியில் இவர் பணிபுரிந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply