இந்துக்களால் அனுஷ்டிக்கப்படும் மகாசிவராத்திரி தினம் நேற்றையதினம்(08) நாட்டின் பல பாகங்களிலுமுள்ள இந்து ஆலயங்களில் சிறப்பாக இடம்பெற்றது.
அந்தவகையில், யாழ்ப்பாணம், வடமராட்சி பருத்தித்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள பசுபதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் நேற்றையதினம்(08) இரவு சிவராத்திரி பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றது.
இவ் வழிபாடுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த பக்தர்களுக்கு அப் பிரதேசத்திலுள்ள இராணுவத்தினர் தேநீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி உபசரித்தனர்.
அதேவேளை, குறித்த ஆலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி பூஜை வழிபாட்டிலும் சிவில் உடையில் இராணுவத்தினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.