யாழில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த இளைஞன்..! – உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் – வடமராட்சியில் நியூமோனியா காய்ச்சல் காரணமாக நேற்றைய தினம் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாடசாலை வீதி – துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த 29 வயதுடைய  முத்துலிங்கம் சிவதர்ஷன் என்பவரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

வைத்தியசாலையில் சில தினங்களுக்கு முன்னர் சிகிச்சை பெற்ற அவர், நேற்றையதினம்  வீட்டில் மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, 

பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.

உடற்கூற்று பரிசோதனையில் நியூமோனியா தொற்று ஏற்பட்டு மரணம் சம்பவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply