முல்லைத்தீவில் கேரளா கஞ்சாவுடன் சிக்கிய இளம் பெண்…!

முல்லைத்தீவில் கேரளா கஞ்சாவுடன் இளம் பெண்ணொருவர் பொலிஸாரால் இன்று(11)   கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்திற்கு அருகில் இராணுவத்தினர், விஷேட அதிரடி படையினர், பொலிஸார் இணைந்து விசேட சோதனை நடவடிக்கையினை இன்று(11)  மேற்கொண்டனர்.

இதன்போது, மன்னாரிலிருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்த தனியார் பேருந்தினை வழிமறித்து சோதனையை மேற்கொண்ட போது பெண்ணொருவரின் கைப்பையில் இருந்து 500 கிராம்  கேரளா கஞ்சா கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் குறித்த பெண், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆனையிறவு தாழையடி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளம் பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply