5 வயதில் இப்படியொரு திறமையா..! சர்வதேச சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த இலங்கைச் சிறுவன்

இலங்கையைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ரூபிக்ஸ் க்யூப்பை குறுகிய நேரத்தில் சேர்த்து புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

நுவரேலியா – தலவாக்கலை பகுதியைச் சேர்ந்த 5 வயதுடைய பாராதிராஜா அனீத் எனும் சிறுவனே இந்த சாதனையை படைத்துள்ளார்.

குறித்த சிறுவன் 13.90 வினாடிகளில் ரூபிக்ஸ் க்யூப்பை ஒழுங்குபடுத்தி சர்வதேச 

சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

கடந்த   ஜனவரி 18 ஆம் திகதி  இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

குறித்த சிறுவனின் திறமைக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply