கடந்த 18 மாத காலப் பகுதியில் ஆறுகள், கிராமத் தொட்டிகள் மற்றும் பிற ஆழமான நீர்நிலைகளில் நீரில் மூழ்கி 168 குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர் என கல்வி அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பற்ற சுற்றுலா, கல்விச் சுற்றுலா, யாத்திரை போன்றவற்றை நடத்த வேண்டாம் என கல்வி அமைச்சு அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பொறுப்பற்ற முறையில் இதுபோன்ற பயணங்களுக்கு செல்ல அனுமதி வழங்கினால் பாடசாலை அதிபர்கள் பதில் சொல்ல வேண்டும்.
அத்துடன் மது போதையில் ஆறுகளில் நீராடச் சென்று உயிரிழந்த 18 வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுபோன்ற ஆபத்தான மற்றும் அபாயகரமான பயணங்களுக்கு மாணவர்களை ஒழுங்கமைத்து அவர்களுடன் சென்றதற்காக சுமார் ஆறு பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் இரண்டு அதிபர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.