அவுஸ்திரேலியாவில் வீடொன்றில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தம்பதி..!

 

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து இலங்கையை பூர்விகமாக கொண்ட   தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் சுமார் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று(12) இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

Leave a Reply