விசாரணைகள் முடியும்வரை விளக்கமறியல்! கெஹலியவுக்கு பிணை வழங்க மறுத்த நீதிமன்றம்..!

 

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும்  நால்வருக்கு எதிரான தடுப்பூசி விவகார வழக்கு நிறைவடையும் வரை அவர்களுக்குப் பிணை வழங்க நீதிமன்றம் இன்று (14) மறுத்துள்ளது.

மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றமே பிணைக் கோரிக்கையை மீண்டும் நிராகரித்துள்ளது.

இதேவேளை, தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் ஊசி போட்ட சம்பவம் தொடர்பில் மருத்துவ வழங்கல் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் துசித சுதர்சன குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரதிப் பணிப்பாளர் வெளிநாட்டிலிருந்து இலங்கை திரும்பிய பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முன்னிலையாகியிருந்தார்.

இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட  நீண்ட விசாரணைக்கு பின்னர் அவர் நேற்று கைது செய்யப்பட்டார்.

Leave a Reply