கனடாவில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை!

கனடாவின் ஒட்டாவாவில் கொலை செய்யப்பட்ட 6 இலங்கையர்களின் இறுதிக் கிரியைகள் நாளை (17) இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இறுதிக் கிரியைகள்  இலங்கை நேரப்படி பிற்பகல் 01.00 மணிக்கு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் தலைநகர் ஒட்டாவாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உள்ளடங்களாக 06 இலங்கையர்கள் கடந்த 07ஆம் திகதி கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் , மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என கனடா ஒட்டாவா பல்கலைக்கழகத்தின் மனநல நிபுணர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply