மேதினத்தில் அதிரடி காட்டத் தயாராகும் ஐக்கிய தேசிய கட்சி…! தீவிரமடையும் ஏற்பாடுகள்…!

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கொண்டாட்டத்தை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிகளவான மக்களுடன் இது மேற்கொள்ளப்படும் என முன்னாள் நிதியமைச்சரும், ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்டத் தலைவருமான ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், மே தினப் பேரணியை மாபெரும் வெற்றியடையச் செய்வதற்கு கட்சியின் அனைத்து அமைப்பாளர்களதும் அதிகபட்ச ஆதரவைப் பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை பிரதான கட்சிகளான பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியினரும் இம்முறை பிரம்மாண்டமான மேதின நிகழ்வை நடாத்த தயாராகி வருவதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply