மண்டை தீவில் நீரில் மூழ்கி 10 வயது சிறுமி உயிரிழப்பு..!!

மண்டை தீவு பிரதேசத்தில் கடலில் குளிக்க சென்ற இடத்தில் 10 வயது சிறுமியொருவர்  நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடற்கரைக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கத்தில் நீராடிக்கொண்டிருந்த போதே நீரில் மூழ்கியுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுமி  அவந்திகா  -விஜயகாந் எனும் 10 வயதுடையவர் ஆவார். 

குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply