இலங்கையை ரசிக்க மொட்டை மாடி தொடருந்து..! மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

 

இலங்கை தொடருந்து பிரதான இயந்திர பொறியியல் திணைக்களம் திறந்த பார்வைத் தளத்தை உள்ளடக்கிய தொடருந்து பெட்டியை உருவாக்கியுள்ளது.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மலையகத்தின் இயற்கைக்காட்சிகளை ரசிக்க ஏதுவானதாக குறித்த தொடருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.

முற்றிலும் உள்நாட்டில் கட்டப்பட்ட இந்த தொடருந்து மலையக தொடருந்து சேவையில் எதிர்காலத்தில் சேர்க்கப்படுமென நம்பப்படுகின்றது.

பாவனையில் இல்லாத பழைய ரோமானிய தொடருந்து பெட்டியே இவ்வாறு புதிய பார்வைத் தளமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய தொடருந்து உற்பத்திக்கான செலவு ரூ. 30 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply