
யாழ்ப்பாணம் – கொய்யாத்தோட்டம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
குறித்த வீட்டில் இருந்த 75 வயதுடைய மூதாட்டி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் வேலை செய்து வந்த ஆண் ஒருவரே, மூதாட்டியை பூச்சாடி ஒன்றினால் அடித்துக் கொலை செய்துள்ளார் என தெரிய வருகின்றது.
சம்பவம் தொடர்பில், பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.