தென்மராட்சியில் பிரமாண்டமாக நடைபெறும் கிரிக்கெட் போட்டித்தொடர்..!!

யாழ் தென்மராட்சியில் வருடாந்தம் சிறப்பாக நடைபெற்றுவருகின்ற நொதேர்ன் பிறீமியர் லீக் (NTPL) இவ்வருடமும் தொடர்ச்சியாக 5வது தடவையாக நேற்று  16.03.2024 காலை எட்டு மணிக்கு மட்டுவில் வளர்மதி விளையாட்டு கழக மைதானத்தில் ஆரம்பமாகியது . 

நொதேர்ன் பிரிமியர் லீக்கின் தலைவர் நிரஞ்சீவ்  தலைமையில் நடைபெற்ற இவ் ஆரம்ப நிகழ்வில் விருந்தினர்களாக  உயிர்த்தமிழ் ஊடகத்தின்  பணிப்பாளர் விமல்ராஜ் , சமூக  சேவையாளரும் லவ்லி நிறுவன உரிமையாளருமான  கலாநிதி அகிலன் முத்துக்குமாரசுவாமி , சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  மற்றும் சூழகம் அமைப்பின் இணைப்பாளர் கருணாகரன் குணாளன் ஆகியோர் கலந்துகொண்டு போட்டிகளை ஆரம்பித்து வைத்தனர் .


Leave a Reply