உணவு ஒவ்வாமையால் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

பதுளை – மீகஹகிவுல பகுதியில் உணவு ஒவ்வாமையால் மூன்று பேர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.

உலர்ந்த சோறு, தேங்காய், சீனி ஆகியவற்றில் தயாரிக்கப்பட்ட உணவை உட்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட அவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 14 , 34 , 28 வயதுடைய மூவரே இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த உணவை தேநீருடன் அருந்தியதன் காரணமாக அதிக வாந்தி ஏற்பட்டதால் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

 

Leave a Reply