அரச பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பை வெளியிட்ட கல்வி அமைச்சு..!

 

2024ஆம் ஆண்டுக்கான அனைத்து அரச பாடசாலை மாணவர்களுக்கும் பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகளை வழங்க கல்வி அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.

இதன்படி, சகல பாடசாலைகளுக்கும் விநியோகிப்பதற்காக பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பிரதேச கல்வி அலுவலகங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும் இதுவரை பாடசாலை பாடப்புத்தகங்கள் மற்றும் சீருடைகள் வழங்கப்படாத பாடசாலைகள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அறிவிக்குமாறு கல்வி அமைச்சு அந்தந்த அதிபர்களுக்கு தெரிவித்துள்ளது

Leave a Reply