
யாழ்ப்பாணம், பெப் 22: யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதி பகுதியில் மூதாட்டியொருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் மரியநாயகம் காணிக்கையம்மா ஜெயசீலி (72) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக யாழ்ப்பாண காவல்துறை மூத்த அதிகாரி கூறுகையில் “ராசாவின் தோட்டத்தில் உள்ள
மாடி வீடொன்றின் கீழ் தளத்தில் மூதாட்டி வசிக்கிறார். வீட்டின் மேல் மாடியில் பல்கலைகழக மாணவர்கள் சிலர் தங்கியிருந்து கல்வி கற்கிறார்கள். வீட்டிற்கு வேலையாள் வருவார் என கூறி, அயல்வீட்டிலிருந்து கத்தி, கோடாரியென்பன வாங்கியிருந்தார். மூதாட்டி இன்று மதியம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வழக்கமாக அணியும் தங்கச் சங்கிலி காணாமல் போயுள்ளது. வீட்டுக்கு வந்த வேலையாள் தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்றார் அவர்.