எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு காரணமாக பல பொருட்களின் விலை குறையும் என அரசியல் விமர்சகர்கள் கணித்து வருகின்றனர்.
குறிப்பாக பல அரசியல் பிரதிநிதிகளும் பொருட்களின் விலைகளில் மாற்றம் ஏற்படும் என தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அரசாங்கம் தற்போது பாரிய இலாபம் ஈட்டி வருவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி இலாபத்தை மக்களுக்கு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பலர் எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் குறைவடையும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.