யாழில் குடும்பப் பெண் ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணம் – குடத்தனை பகுதியில் குடும்பப் பெண் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவத்திற்கு கிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை இன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணின் வீட்டில் செய்த சோதனையில் 3 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணை இராணுவத்தினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *