சீனாவின் சில பகுதிகளில் நிலத்திற்கு அடியில் குழிகளை தோண்டி வீடுகளை உருவாக்கி மக்கள் வசித்து வருகின்றனர்.
இது அமாண்டரின் மொழியில் “டிகெங்யுவான்” என்றும் அழைக்கப்படுகிறது.
அதாவது “குழி முற்றங்கள்” என்று கூறப்படும் வீடுகள் ஆகும்.
குகை குடியிருப்பு
வடக்கு சீனாவில் உள்ள லோஸ் பகுதியில் பொதுவாகக் ஒரு வகை குகை குடியிருப்பு காணப்படுகிறது.
வட சீனாவில் அமைந்துள்ள பெய்யிங் கிராமத்தில் பெரும்பாலான வீடுகள் பூமிக்கடியில் கட்டப்பட்டுள்ளன.
மேலிருந்து பார்த்தால், அந்தப் பகுதி முழுவதும் சமவெளியாக இருந்தாலும், பூமிக்கு அடியில் ஆயிரக்கணக்கான வீடுகள் இருக்கின்றன.
சுற்றுலா கிராமங்கள்
பாரம்பரியமாக கட்டப்பட்ட இந்த வீடுகள் பல ஆண்டுகள் பழமையானவையாக இருந்த போதிலும், இன்றும் பல குடும்பங்கள் குறித்த வீடுகளில் வாழ்கின்றனர்.
இந்த பகுதியில் உள்ள பல வீடுகள் சுற்றுலா கிராமங்களாக தற்போது மாற்றப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த இடத்தை பார்க்க வருகிறார்கள்.
பழமையான குழி முற்றங்கள்
சீன அரசாங்கம் கடந்த 2011 ஆம் ஆண்டு குறித்த இடத்தை அருவமான கலாச்சார பாரம்பரியமாக பட்டியலிட்டது.
வரலாற்று ஆதாரங்களின்படி, வடக்கு சீனாவின் லோஸ் பீடபூமியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகள் சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாக கருதப்படுகிறது.
இயற்கைச் சூழலைக் கையாளும் வகையில், அதாவது கோடையில் குளிர்ச்சியாகவும், குளிர்காலத்தில் மக்களை சூடாக வைத்திருக்கும் வகையிலும் குறித்த வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மென்மையான மண்
இந்த குகை வீடுகளை கட்ட செங்கல் அல்லது ஓடுகள் பயன்படுத்தப்படுவதில்லை. லோஸ் பீடபூமியின் மஞ்சள் மண் மிகவும் மென்மையாக இருந்தது. எனவே தோண்டுவது எளிது. இருப்பினும், அது எந்த துணையும் இல்லாமல் நிற்கும் அளவுக்கு வலிமையானது.
இந்த வீடுகளின் முற்றத்தின் அளவு மாறுபடும். இது 39 அடி உயரம் வரை கூட இருக்கும். இதன் ஆழம் 20 முதல் 33 அடி வரை இருக்கும்.
அறைகள் சுவர்கள் அல்லது கற்கள் மற்றும் மண்ணின் தூண்களால் வலுவாக அமைக்கப்பட்டுள்ளன. வேறு எந்த கட்டிடமும் தரைக்கு மேல் கட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post பூமிக்கு அடியில் கட்டப்பட்டுள்ள வீடுகள்! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.