நாட்டில் கோழி இறைச்சியின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்…!

  

ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் சில்லறை விலை ரூ. 30 ஆல் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய மையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்  

விலைக் குறைப்பு தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோ கிராம் கோழி இறைச்சியின் புதிய விலை ரூ. 1,180 மற்றும் கறி கோழி ரூ. 1,100 ஆக விற்பனை செய்யப்படுகின்றது.

அத்துடன் தோல் இல்லாத கோழி இறைச்சி ரூ. 1,100 ற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ கிராம் மாட்டிறைச்சி ரூ. 2,400 ஆகவும், ஒரு கிலோ கிராம் ஆட்டிறைச்சி ரூ.3,300 ற்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 

Leave a Reply