மகனுக்காக இளம் தாய் செய்த செயல்..! – இலங்கை வாழ் பெற்றோர்களை நெகிழ வைத்த சம்பவம்

குருநாகல் பகுதியில் தனது மகனுடன் சேர்ந்து மரதன் ஓடிய இளம் தாய் ஒருவரின் செயல் ஒட்டுமொத்த பெற்றோரின் கவனத்தையும்  ஈர்த்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சித்தார்த்தா மகா வித்தியாலத்தில் அண்மையில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியின் போது  மரத ஓட்டப்போட்டியும் நடைபெற்றது.

இதன்போது நான்கு கிலோமீற்றர் தூரத்தை தனது மகனுடன் சேர்ந்து ஓடிய தாய், பெற்றோருக்கு முன்னூதாரமாக மாறியுள்ளார்.

குறித்த தாயின் செயலை கண்டு இலங்கை வாழ் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply