ஊரடங்கு உத்தரவை மீறுவோரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதன் மூலம் மட்டும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முடியாதென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தலதுடுவ தெரிவித்தார்.
மேலும் தடுப்பூசி பெற மறுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார்.
அத்தோடு டெல்டா வைரஸ் மிகவும் அபாயகரமானது என்பதுடன் வேகமாகப் பரவுகின்றது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்தார்.
மேலும் இதை நாட்டு மக்களால் மட்டுமே தடுக்க முடியும் என்று கூறிய அவர், அவசரத் தேவை தவிர வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று வலியுறுத்தினார்.
அத்தோடு முகக்கவசம் அணியாதவர்களை நீதிமன்றுக்கு அழைத்துச் செல்லும் போது கொரோனா கட்டுப்பாட்டில் இல்லை என்றும் ஒவ்வொருவரும் சுய ஒழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டுமென்றும் அவர் கூறினார்.