விசேட சோதனையில் பாதாள உலக குழு உறுப்பினர்கள் மூவர் கைது!

 

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குவதற்கு நேற்று (19) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த “வாழைத்தோட்டம் தினுக”  என்பவருடன் நெருங்கிய தொடர்புடைய என கூறப்படும் சந்தேகநபரொருவர் பொரல்லை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கஞ்சிபான இம்ரானின் குற்றக் கும்பலைச் சேர்ந்த “கோடா ரிஸ்வான்” என்பவர் 6,400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மாளிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மேலும் “புகுடிக்கண்ணா” வின் உதவியாளரான “முனவீர ஆராச்சிலாகே சுசந்த ” என்பவர்  6,620 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கஜிமாவத்தை பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்திற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply