வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி எம்.பிக்களை உடன் நாடு திரும்புமாறு உத்தரவு..!

 

வெளிநாட்டில் இருக்கும் ஆளும் கட்சி உறுப்பினர்களை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் அனைவரும் நாளை 21 ஆம் திகதி காலைக்குள் நாட்டிற்குள் வரவேண்டும் என ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பிரதம செயலாளருக்கு அறிவித்துள்ளார்.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ளமையாலேயே கட்சி இந்த முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் பந்துல குணவர்தன, அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, மனுஷ நாணயக்கார, பவித்ரா வன்னியாராச்சி பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் 6 பேர் இதில் அடங்குகின்றனர்.

Leave a Reply