துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளி உயிரிழப்பு..! விசேட அதிரடிப்படை வீரரின் உயிருக்கும் ஆபத்து

கம்பஹா – கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுடன் தொடர்புடையவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று இரவு வீடு ஒன்று சோதனையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

அங்கு, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

பதிலடித் தாக்குதல்களில் சந்தேக நபர் காயமடைந்து ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் பெட்டா மஞ்சு என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் சகா என்பது தெரியவந்துள்ளது.

காயமடைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை வீரர் ஒருவரும் ராகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply