
டெங்கு கட்டுப்பாட்டு செயலணியால் , ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்டவர்களை நிரந்தர மாக்குங்கள் என நாடாளுமன்ற இரா.சாணக்கியன் சபையில் இன்று தெரிவித்துள்ளார்.
கொரோனா காலத்தில் கூட இவர்கள் தமது சேவைகளை சிறப்பாக ஆற்றியுள்ளனர்.
22 ஆயிரம் ரூபா சம்பளத்துடன் இந்த பணியை இன்று வரை மேற்கொள்கின்றனர்.
கோவிட் ,டெங்கு என பல நோய்கள் இங்கு வந்து செல்லும்.இந்த பணியாளர்கள் சந்தோஷமாக வேலை செய்யக் கூடியவர்கள்.
சுமார் 1868 பணியாளர்கள் உள்ளனர். வடக்கில் 82 பேர்,கிழக்கில் 106 பேர் இவ்வாறு கடமையில் உள்ளனர்.
8 ஆம் தர கல்வியுடன் வேலை செய்ப்பவர்கள் 1169 பேர் உள்ளனர்,ஓ.எல் தரத்துடன் 322 பேர் உள்ளனர்.
ஆகவே இவர்களை ஒரு லட்சம் வேலை வாய்ப்பின் கீழ் உள்வாங்குங்கள்.அவர்கள் கொழும்பில் வெயிலில் போராடி எந்த பயனும் கிடைக்கவில்லை என்றார்.