கடும் வெப்பமான காலநிலை – கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆபத்து! ஆராய்ச்சியில் அதிர்ச்சி

 

அதிக வெப்பமான காலநிலை காரணமாக வெளியில் வேலை செய்யும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஆபத்து இருப்பதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

அத்தகைய ஆபத்தை எதிர்கொண்டு பணியாற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு குறைபிரசவம் மற்றும் கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் எனத் தெரியவந்துள்ளது.

இந்தியா – சென்னையில் உள்ள உயர்கல்வி நிறுவனம் ஒன்று 2017 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தமிழ்நாட்டில் வெப்பமான சுற்றுச்சூழல் நிலைமைகளின் கீழ் பணிபுரியும் 800 கர்ப்பிணிப் பெண்களைப் பயன்படுத்தி இந்த ஆராய்ச்சியை நடத்தியது.

குறித்த பெண்கள் விவசாயம், செங்கல் உற்பத்தி மற்றும் உப்பு உற்பத்தி துறைகளில் பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த பெண்களில், 5 சதவீதமானோர் கருச்சிதைவுகளை எதிர்க்கொண்டுள்ள நிலையில், குறைமாத பிரசவம் 6.1 சதவீதமாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *