பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் குழு கூட்டம் தம்பலகாமம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் (21) இடம் பெற்ற குறித்த கூட்டத்தில் பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வொன்றினை முன்வைப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
சிறுவர் பெண்கள் தொடர்பில் துஷ்பிரயோகங்களை தடுக்கவும் கிராமிய மட்டங்களில் இவ்வாறான விடயங்கள் இடம் பெறாது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் சிறந்த நல்ல விடயங்களை கொண்டு சேர்ப்பது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த நிகழ்வில் தம்பலகாமம் பொலிஸ் நிலைய மகளிர் பிரிவு பொலிஸ் அதிகாரி, பொதுச் சுகாதார மருத்துவ மாதுக்கள், சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் ,அகம் நிறுவனத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.

