வவுனியாவில் துப்பாக்கி ரவைகளுடன் இளைஞன் கைது…!

வவுனியாவில் T56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயினுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா செட்டிக்குளம் பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது 

வவுனியா செட்டிக்குளம் காந்தி நகர் பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் இருந்த ரி56 துப்பாக்கி ரவைகள் , 1005 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் இதன்போது மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply