இலங்கையர்களை வாட்டும் கடும் வெப்பம்- சுருண்டு விழுந்து பரிதாபமாக உயிரிழந்த வர்த்தகர்..!

 

அக்குரஸ்ஸ, திகல பகுதியில் அதிக வெப்பம் காரணமாக நபர் ஒருவர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளார். 

பல வருடங்களாக இதய நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த 72 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையான வர்த்தகரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த பகுதியில் வழங்கப்பட்ட தான நிகழ்வொன்றில் கலந்து கொள்வதற்காக மோட்டார் சைக்கிளில் அவர் சென்றுள்ளார்.

எனினும் சைக்கிள் டயரின் காற்று வெளியேறியதனால் அவர் அக்குரஸ்ஸ நகரை நோக்கி மோட்டார் சைக்கிளை தள்ளி கொண்டு சென்றுள்ளார்.

இதன் போது உஷ்ணம் மற்றும் சோர்வு காரணமாக சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

அவர் கீழே விழுந்து சில நிமிடங்களுக்கு 1990 ஆம்புலன்ஸ் வந்த போதிலும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதால், பிரேத பரிசோதனை செய்வதற்காக, சடலம் மாத்தறை பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மாத்தறை வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் பின்னர், இதயத்தின் உயிரணுக்கள் குறைந்தமையினால் மரணம் ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply