சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்!

சட்டவிரோதமாக மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.

இந்த போராட்டமானது தொடர் போராட்டமாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடையும்.

அந்தவகையில் இன்றையதினம் ஆரம்பமாகிய இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.


Leave a Reply