ரெலோவின் தலைவராக மீண்டும் செல்வம் அடைக்கலநாதன் தெரிவு!!

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டார்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று இடம்பெற்றது.

இதன்போது கட்சியின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் தெரிவுசெய்யப்பட்டுள்ளதுடன் செயலாளாராக கோவிந்தன் கருணாகரம்(ஜனா),தேசிய அமைப்பாளராக பிரசன்னா இந்திரகுமார்,நிதிச்செயலாளராக சுரேன் குருசாமி, நிர்வாகசெயலாளராக விந்தன் கனகரத்தினமும், இளைஞரணி செயலாளராக செந்தில்நாதன் மயூரன் ஆகியோரும் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை ரெலோவின் 11வது தேசியமாநாடு நாளை காலை வவுனியா மாநகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply