மஞ்சள் கடவையில் கற்குவியல்- நல்லூர் பிரதேச சபைச்செயலாளர் மீது பொலிஸ் முறைப்பாடு!

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் மஞ்சள் கடவையில் காணப்பட்ட கற்குவியால் ஏற்பட்ட விபத்து தொடர்பில்  யாழ் பொலிஸ் நிலையத்தில்  நல்லூர் பிரதேச சபைச் செயலாளர் மீது பொலிஸ் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில் பகுதியில் அமைந்துள்ள உப அலுவலகத்துக்கு முன்னால் உள்ள மஞ்சள் கோட்டுக் கடவையில் நீண்ட நாட்களாக குறித்த கற்குவியல் காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில்  இரவு வேளை குறித்த வீதியால் பயணித்த ஒருவர் மஞ்சள் கோட்டு கடவையில்  காணப்பட்ட கற்குவியலில் விபத்துக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போலிஸ் நிலையத்தில் நல்லூர் பிரதேச சபை செயலாளர் மீது முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

Leave a Reply