முட்புதரில் இருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலத்தால் பரபரப்பு..!

ஹப்புத்தளை, பிடபொல பிரதேசத்தில் வீதியோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று காலை பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய இதல்கஸ்ஹின்ன, போவத்த பகுதியைச் சேர்ந்தவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக தியத்தலாவை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply